/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., இளைஞரணி மாநாடு: அமைச்சர் கணேசன் அழைப்பு
/
தி.மு.க., இளைஞரணி மாநாடு: அமைச்சர் கணேசன் அழைப்பு
ADDED : ஜன 20, 2024 06:16 AM

சிறுபாக்கம்: சேலத்தில் நடக்கும் தி.மு.க., இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது., தி.மு.க., இளைஞரணி சார்பில் மாநில மாநாடு நாளை (21ம் தேதி) சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில், தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.