/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 20, 2024 06:11 AM

கடலுார்: கடலுாரில் தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சேலத்தில் நாளை 21ம் தேதி நடைபெறவுள்ள 2வது இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர தி.முக.., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில், கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆலோசனையின்பேரில், கடலுார் மாவட்ட இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், குப்புராஜ், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிரவீன், விக்ரம் உட்பட பலர் கலந்து கொணடனர்.