/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., இளைஞரணி மருத்துவ முகாம்
/
தி.மு.க., இளைஞரணி மருத்துவ முகாம்
ADDED : நவ 21, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் சாலக்கரை 35வது வார்டில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தி.மு.க., மாநகர இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சரத் தலைமை தாங்கினார். ஸ்டாலின், தீபக் ராஜன், வாசுதேவன், மனோஜ் முன்னிலை வகித்தனர். டாக்டர் அபிநயா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.
அப்போது, காமேஷ், சரண், திருமலை மற்றும் மாநகராட்சி ஊழியர் பக்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.