/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் தி.மு.க., முப்பெரும் விழா
/
நெய்வேலியில் தி.மு.க., முப்பெரும் விழா
ADDED : டிச 29, 2025 05:53 AM

நெய்வேலி: நெய்வேலியில் தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் பிறந்தநாள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையறிந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் அனைத்து நிர்வாக பணிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கிடும் வகையில் நியமனப்பதவி கொடுத்து அவர்களுக்கான அதிகாரப்பகிர்வை கொடுத்துள்ளார்,'என்றார்.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், பொருளாளர் ஜோதி, மாவட்ட பிரதிநிதி ராம வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் பாக்கியராஜ், ஏழுமலை, பூபதி, பிச்சையா, ஸ்டாலின், கார்த்தி, சிவதானம், கோபு, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் குமார், பொருளாளர் அன்பழகன், அருண், மகாராஜன், அர்ஜுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

