/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
/
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
ADDED : நவ 25, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: ராமநத்தம் அடுத்த ஆக்கனுார் ஊராட்சியில் தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாரதிராஜா தலைமை தாங்கினார். மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முதியவர்கள், துாய்மை பணியாளர்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

