/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி
ADDED : டிச 20, 2024 04:34 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யலட்சுமி உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் வளர்த்தல் செயல்முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
நபார்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முழு மாதிரி செயல்விளக்க திடலில் மீன் குஞ்சுகள் வளர்த்தல், மீன் பராமரிப்பு, நோய் கண்டறிந்து பராமரித்தல், கலப்பின மீன்களாகிய ரோகு, கட்லா, கெண்டை, புல்கெண்டை, கிப்ட் திலப்பியா, மிர்கள் ஆகியவற்றை குட்டை மற்றும் தார்பாளின் விரித்து நீர் தேக்கி வளர்த்தல் குறித்து பயிற்சி தரப்பட்டது.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த பண்ணையில் கொடுவா மீன் வளர்த்தல் பயிற்சி பரங்கிப்பேட்டையில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் காயத்ரி மண்டல ஆராய்ச்சி நிலைய பண்ணையில் உள்ள மீன் குட்டையில் மீன் வளர்த்தல், நீர் நிலையில் வளரும் மரங்கள், நெல் பயிர் செய்தல், இயற்கை எரு தயாரித்தல், அசோலா, தேனி வளர்ப்பு, முயல், வாத்து மற்றும் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தார்.