ADDED : டிச 30, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
மேல்புவனகிரி ஆதிவராகநத்தம் சன்னதி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தையல்நாயகி,80; இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ஏற்பாட்டில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தையல்நாயகியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

