UPDATED : அக் 06, 2026 10:29 PM
ADDED : அக் 06, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: தோஸ்த் ரக வேனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆனந்தபாபு, 39. அசோக் லேலண்ட் தோஸ்த் ரக வேன் வைத்திருந்தார். கடந்த 3ம் தேதி இரவு, ஆலடி சாலையில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலையில் வேன் திருடு போயிருந்தது.
புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
