/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு
/
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு
ADDED : ஏப் 07, 2025 04:56 AM

மந்தாரக்குப்பம் : கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் மறைந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி படத் திறப்பு விழா அவரது சொந்த ஊரான நெய்வேலி அடுத்த உய்யக்கொண்டராவி கிராமத்தில் நடந்தது.
வழக்கறிஞர் வெங்கட்டரமண ராமலிங்கம் தலைமை தாங்கினார். கிருஷ்ணா மருத்துவமனை குழும டாக்டர்கள் ஸ்ரீகிருஷ்ணா, ரம்யாஸ்ரீகிருஷ்ணா வரவேற்றனர்.
கிருஷ்ணசாமி ரெட்டியார் நினைவு கல்வி குழுமம் நிறுவனர் ராஜேந்திரன், மறைந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., ஜெயப்பிரியா குழுமம் நிறுவனர் இராசகோபாலன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், டாக்டர்கள் ராமகிருஷ்ணன், இளங்கோவன், ராஜேந்திரன், பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண கிேஷார், கார்த்தியாயினி, கிருஷ்ணா மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ஞானஸ்கந்தன், நிர்வாக அலுவலர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.சி., ஜெயச்சந்திரன், வள்ளிவிலாஸ் பாலு, வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், பெருமாள் ஏரி பாசன விவசாய சங்க தலைவர் சண்முகம், தேவி காஸ் ஏஜன்சி பசுவலிங்கம், வழக்கறிஞர் ராஜேஷ்பாபு, விஜயா வெங்கட்ட ரமண ராமலிங்கம், வீரராகவன், சுலோசனா, நாகராஜன், உய்யக்கொண்டராவி ராமகிருஷ்ணன், கருணாமூர்த்தி, சதீஷ், சுப்பரமணியம், செல்வராசு, ராஜாமோகன், ராஜூலு அன்ட் சன்ஸ் கோதண்டராமாபுரம் பாலமுரளி, ஓட்டல் ராம்பவன் கணேஷ், இடங்கொண்டாம்பட்டு இளங்கோவன், அசோகன், என்.எல்.சி., ஒப்பந்ததாரர் அரிதாஸ் மற்றும் டாக்டர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்.
உய்யக்கொண்டராவி கிராமத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் அவரது குடும்பத்தினர் மரக்கன்றுகள் நட்டனர்.

