/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளின் பயத்தை போக்க வேண்டும் டாக்டர் சாமிநாதன் 'பளீச்'
/
குழந்தைகளின் பயத்தை போக்க வேண்டும் டாக்டர் சாமிநாதன் 'பளீச்'
குழந்தைகளின் பயத்தை போக்க வேண்டும் டாக்டர் சாமிநாதன் 'பளீச்'
குழந்தைகளின் பயத்தை போக்க வேண்டும் டாக்டர் சாமிநாதன் 'பளீச்'
ADDED : அக் 03, 2025 01:40 AM

விருத்தாசலம்: குழந்தைகளுக்கு பள்ளி, கல்வி மீதுள்ள பயத்தை போக்குவதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என மருத்துவர் சாமிநாதன் கூறினார்.
விருத்தாசலம், ஆலிச்சிகுடி சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், நடந்த 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பங்கேற்ற விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறியதாவது:
பழங்காலம் தொட்டு இந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சமீப காலமாக, சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக அனைத்து நாட்டு மக்களும், அனைத்து இன மக்களும், அவர்கள் இனத்தினுடைய பழக்க வழக்கங்களை முன்னிலைபடுத்துவது என்பது நடந்து வருகிறது. குழந்தைகளை விளையாட்டு வழியில் கல்வி கற்க வைப்பது. அதேபோல், குழந்தைகளுக்கு பள்ளி, கல்வி, மீதுள்ள பயத்தை போக்குவதற்கு இதுபோன்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.