/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 01, 2025 12:11 AM

கடலுார்; கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடலுார் அடுத்த பாதிரிகுப்பம் தர்மராஜர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. அதை முன்னிட்டு 29ம் தேதி காலை பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை நான்காம் கால பூஜை, தீபாராதனைக்குப்பின் கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு தர்மராஜர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் விமானம் மற்றும் புதிய ராஜகோபுரத்திற்கும், 10.15மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிேஷகத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.