/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
/
திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED : மே 24, 2025 07:08 AM

கடலுார், : கடலுார் வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
தினசரி பாரத உபன்யாசமும் நடந்தது. கடந்த 19ம் தேதி காளியம்மன் உற்சவம், 20ம் தேதி பகாசூர சம்ஹாரம், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 22ம் தேதி கரகத் திருவிழா நடந்தது. 18ம் நாள் திருவிழாவான நேற்று காலை அரவான் பலியூட்டுதலும், மாலை தீ மிதி திருவிழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.