தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுாரில் குடிநீர் நீர் வினியோகம் 'கட்'

கடலுாரில் குடிநீர் நீர் வினியோகம் 'கட்'

கடலுாரில் குடிநீர் நீர் வினியோகம் 'கட்'


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் நகரில் கடந்த இரு தினங்களாக, குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கடலுார் மாநகராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீரும், திருவந்திபுரம் கேப்பர் மலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு அதை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மஞ்சக்குப்பம் பகுதி, 6 வது வார்டு உள்ளிட்ட பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் கம்மியம்பேட்டை அருகே உடைப்பு ஏற்பட்டதால் கடந்த இரு தினங்களாக, குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும் இதற்கு மாற்றாக குடிநீர் லாரிகளில் சப்ளை செய்வதையும் நிறுத்திவிட்டது. தனியார் டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் குடிநீரும் வராததால் மக்கள் அவதிப்பட்டனர்.

அதனால் கடலுார் மாநகர மக்கள் மாற்று வழியின்றி குடிநீருக்காக தவித்தனர். குடத்துடன் நீண்ட துாரம் சைக்கிளில் சென்று கிராமப்புறங்களில் வரும் தண்ணீரை பிடித்து வந்து பயன்படுத்தினர். நாளொன்றுக்கு ஒரு முறை வழங்கும் குடிநீரையே முறையாக வழங்காத மாநகராட்சி நிர்வாகம், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் 2.0 திட்டத்தினை எவ்வாறு நிறைவேற்றப்போகிறது என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us