/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்
கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்
கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்
ADDED : ஜன 12, 2026 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்:கூழாங்கற்கள் கடத்திச்சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, காலை 7:30 மணியளவில் அருகேரி - நந்திமங்கலம் சாலை வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், அரசு அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்கள் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.
போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் விருத்தாசலம் அடுத்த புதுப்பேட்டை சந்தோஷ், 36, என்பவரை கைது செய்தனர்.