நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலம், முஸ்தாபுர் மாவட்டம், ஆனந்தகர்ஜா போஸ்ட், காஜிதா தெருவை சேர்ந்தவர் அமோத்சிங், 42; பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக, அவர் தங்கியிருந்த பரங்கிப்பேட்டையில் உள்ள அபார்ட்மெண்ட்டில் துாக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அவரது உறவினர் சஞ்சய் பிரசாத் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

