ADDED : ஆக 25, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு, ஆக.26–பைக்கில் சென்ற டிராக்டர் டிரைவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் முரளி 41: டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முரளி தனது பைக்கில் சிதம்பரம் சென்றார்.
ஒரத்துார் அருகே கிளியனுார் கோணாற்று மதகு வளைவில் செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீதுமோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
அதில், படுகாயமடைந்த முரளியை அப்பகுதியில் உள்ளவர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று நள்ளிரவு 2 மணிக்கு இறந்தார்.
ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
