ADDED : ஜன 24, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்:சாலையில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையத்திற்கு அரசு பஸ், 30 பயணியருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. திட்டக்குடி அடுத்த வடகராம்பூண்டியைச் சேர்ந்த இளங்கோவன், 57, ஓட்டினார்.
இரவு, 10:30 மணிக்கு எஸ்.புதுார்- - நைனார்பாளையம் சாலையில், சிறுபாக்கம் அடுத்த வடபாதி அருகே வந்தபோது, சாலையில் விவசாயிகள் உலர்த்த வைத்திருந்த வேளாண் விளைபொருள் குவியல் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
அதில், பஸ் டிரைவர் இளங்கோவன், பஸ்சுக்குள் சிக்கி உயிரிழந்தார். கண்டக்டர் பாண்டுரங்கன், 50, உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
சிறுபாக்கம் போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர்.

