நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: லாரி டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், கீழ் உசேன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 55; லாரி டிரைவர். இவர் உடல்நிலை பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதையடுத்த சிவக்குமார், திட்டக்குடியில் உள்ள சகோதரியின் மகள் மகேஷ் என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். உடல்நி லை பாதித்ததால் மனமுடைந்த அவர் நேற்று காலை 11:00 மணியளவில் தருமக்குடிக்காடு சுடுகாடு அருகே உள்ள ஆலமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செ ய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீசார் அவரது உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவக்குமார் மகன் அபிஷேக் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

