ADDED : ஜன 22, 2025 11:42 PM

விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், இடைநின்ற மாணவர்களை கண்டறித்து, அவர்களை பள்ளிக்கு வரவழைக்க கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதன்பேரில், அரசு பள்ளி ஆசிரியர்கள், இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பிரச்னைகளை கண்டறித்து, மாணவர்கள் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுசம்பந்தமாக, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் டி.ஆர்.ஓ., ராஜசேகர், ஆசிரியர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வர வழைக்க வேண்டும். மேலும், பள்ளிக்கு வராமல் சுற்றி திரியும் மாணவர்களை வருவாய்துறை அதிகாரிகள் கண்காணித்து, அவர்கள் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அப்போது, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், டி.இ.ஓ., துரைபாண்டியன், தாசில்தார் உதயகுமார், தலைமை ஆசிரியர் செல்வக்குமாரி மற்றும் ஆசிரியர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுடன், டி.ஆர்.ஓ., ஆலோசனை நடத்தினார்.

