/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் டி.ஆர்.ஓ., துவக்கி வைப்பு
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் டி.ஆர்.ஓ., துவக்கி வைப்பு
வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் டி.ஆர்.ஓ., துவக்கி வைப்பு
வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் டி.ஆர்.ஓ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 08, 2025 05:44 AM

கடலுார் : கடலுார் சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன், இயக்குனர்கள் டாக்டர்கள் சுரேந்தர குமார், வினோத்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரையின் அளவு, இசிஜி, எக்கோ, இதய பரிசோதனை, பெண்களுக்கு மேற்கொள்ளும் சிறப்பு பரிசோதனை, எலும்பு அடர்த்தி கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டது.
டாக்டர்கள் ரமணா பிரியா, பிரசன்னா மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.