ADDED : ஏப் 25, 2026 10:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: குடி போதையில் கொத்தனாரை தாக்கிய, போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த நொச்சிக்காட்டை சேர்ந்தவர் சக்திவேல், 48; கொத்தனார். இவர் ஏப்ரல் 24 வேலைக்கு சென்று, வீடு திரும்பினார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், ஆறுமுகம் இருவரும் மது போதையில், சக்திவேலிடம் தகராறு செய்து தாக்கினர். காயமடைந்த சக்திவேல், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சக்திவேல் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முகுந்தன், 21; கைது செய்தனர்.
