ADDED : ஜூலை 05, 2026 03:44 AM

விருத்தாசலம்:எருமனுார் டாக்டர் இ.கே.சுரேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஈரநிலம் - புதிய திசை அறக்கட்டளை சார்பில், 'சமூகத்தின் ஒட்டுமொத்த தீமைகளும் போதையின் வழியே' என்ற தலைப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் அருண்குமார், புலமுதன்மையர் கவிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சின்னபொண்ணு வரவேற்றார்.
ஈரநிலம் அமைப்பு நிறுவனர் தமிழரசன் கலந்துகொண்டு போதைபொருள் பழக்கத்தினால் உடல், மனம், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீய விளைவுகள் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.
