ADDED : ஜன 02, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். என்.சி.சி., மற்றும் உடற்கல்வி இயக்குனர் சரவணன் வரவேற்றார்.
குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் தேவநாதன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு, செஞ்சிலுவை சங்கத் ஒருங்கிணைப்பாளர் பூபாலன், நூலகர் நடராஜன், உதவி ஆய்வாளர் இளவரசி உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

