ADDED : ஜூன் 29, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
கடலுார்: புவனகிரியில், போதைப் பொருட்கள் கோர்ட் உத்தரவுப்படி தீ வைத்து அழிக்கப்பட்டது.
புவனகிரி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை கோர்ட் உத்தரவுப்படி அழிக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி முன்னிலை யில், கீழ்புவனகிரி வி.ஏ.ஓ., இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப் இன்ஸ் பெக்டர் பிரகாஷ் ஆகியோர் போதைப்பொருட் கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், புகையிலை உள்ளிட்ட, 495.870 கிலோ எடையுடைய போதை பொருட்களை தீயிட்டு கொளுத்தி அழிக்கப் பட்டன. தொடர்ந்து அவை, குழி தோண்டி புதைக்கப்பட்டன.
