ADDED : நவ 23, 2024 06:26 AM

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைக்கெதிரான கிளப் சார்பில், போதையில்லா தமிழ்நாடு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஆனந்த்வேலு தலைமை தாங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு வரவேற்றார்.
காட்டுமன்னார்கோவில் நகர வீதிகளில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைக்கும் வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகணபதி, இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சிற்றரசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்திவிநாயகம் நன்றி கூறினார்.