/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 21, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி, ; குறிஞ்சிப்பாடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், 'போதை பொருள் பயன்படுத்துவோருக்கு தடை சொல்வோம்' என்ற தலைப்பில், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவமதி தலைமை தாங்கி, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, வக்கீல் பிரபாகரன், குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி பேசினர்.
நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், ஆசிரியர் அருள் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தன்னார்வலர் சர்மிளா நன்றி கூறினார்.