மது போதையில் வழிப்பறி; ஏட்டு, ரவுடிக்கு 'காப்பு'
மது போதையில் வழிப்பறி; ஏட்டு, ரவுடிக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 09, 2026 06:53 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மது போதையில், வாலிபர்களை தாக்கி, வழிப்பறி செய்த ஏட்டு மற்றும் ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணன், 18. இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன், பெரியார் நகர் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அண்ணா நகர் அருகே, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ரஞ்சித், 32, அவரது நண்பரும், ரவுடியுமான சுபாஷ் சந்திரபோஸ், 24, ஆகியோர், மது போதையில் பைக்கை வழிமறி த்து, சத்தியநாராயணன், அவரது நண்பர் தினேஷ் குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், சத்தியநாராயணனின் மொபைல்போன், தினேஷ்குமாரிடம் இருந்த, 2,000 ரூபாயை பறித்தனர்.
புகாரில், விருத்தாசலம் போலீசார், ரஞ்சித், சுபாஷ் சந்திரபோஸை கைது செய்தனர்.
