திருமணம் செய்து வைக்காத தந்தை மீது தாக்குதல் :குடிகார மகன் கைது
திருமணம் செய்து வைக்காத தந்தை மீது தாக்குதல் :குடிகார மகன் கைது
UPDATED : ஜூலை 26, 2026 06:00 PM
ADDED : ஜூலை 26, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருமணம் செய்து வைக்காத தந்தையை தாக்கிய குடிகார மகனை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை, 55. இவரது மகன் மகேந்திரன், 30. நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த மகேந்திரன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். நிலத்தை பிரித்து தர வேண்டும் என கூறி, தந்தை சின்னதுரையிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மகேந்தின், சின்னதுரையை இரும்பு கம்பியால் தாக்கினார்.
இதில், படுகாயமடைந்த அவருக்கு தலையில் 18 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, மகேந்திரனை கைது செய்தனர்.
