ADDED : பிப் 21, 2024 08:07 AM
அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மது அருந்தியவர்களை எஸ்.பி., தலைமையிலான போலீசார் விரட்டியடித்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், இரவில் பலர் மது அருந்துவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், எஸ்.பி., ராஜாராம் தலைமையிலான போலீசார் நேற்றிரவு 10:30 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு மது அருந்தியவர்களை விரட்டி அடித்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
