/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'
/
குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'
குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'
குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'
ADDED : அக் 03, 2025 01:39 AM

விருத்தாசலம்: குழந்தைகளுக்கு என்ன திறமை உள்ளதோ, அதை பெற்றோர் ஊக்குவித்து தட்டிக்கொடுத்தாலே, அவர்கள் பல துறைகளில் சாதனை புரிவார்கள் என, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசினார்.
விருத்தாசலம், ஆலிச்சிகுடி சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில் நேற்று நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் இப்போதுதான் பள்ளிக்குள் முதல் அடி எடுத்து வைக்கின்றனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சக மாணவர்களுடன் தங்களின் குழந்தைகளை பெற்றோர் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்ன திறமை உள்ளதோ அதை ஊக்குவித்து, தட்டிக்கொடுத்தால், வாழ்க்கையில் அவர்கள் நிறைய துறைகளில் சாதிக்க முடியும்.
குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்யக் கூடாது. நல்ல விஷயங்களை மட்டும் குழந்தைகள் பார்க்கும் படி நடந்து கொள்ள வேண்டும். சுற்றி நடக்கும் தீய பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு தெரியாத அளவில் பார்த்துக் கொண்டாலே, அவர்கள் நல்ல முறையில் வளந்து, சிறந்த முறையில் கல்வி கற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.