/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் பொங்கல் விழா நெதர்லாந்து நாட்டவர் பங்கேற்பு
/
நெல்லிக்குப்பத்தில் பொங்கல் விழா நெதர்லாந்து நாட்டவர் பங்கேற்பு
நெல்லிக்குப்பத்தில் பொங்கல் விழா நெதர்லாந்து நாட்டவர் பங்கேற்பு
நெல்லிக்குப்பத்தில் பொங்கல் விழா நெதர்லாந்து நாட்டவர் பங்கேற்பு
ADDED : ஜன 13, 2025 05:17 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தனியார் பள்ளி பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் கலந்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பியர்ஸ் மழலையர் பள்ளி பொங்கல் விழா வான்பாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் இயற்கையோடு கொண்டாடினர். திறந்த வெளியில் பொங்கல் வைத்தனர்.
சிறுவர், சிறுமிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
உறியடித்தல், கயிறு இழுத்தல்,மியூசிக் நாற்காலி போன்ற விளையாட்டுகள் நடந்தன.சிறுவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்று மகிழ்ந்தனர்.
இதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கெரில் இம்பன்ஸ் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
நிர்வாகி சாய்சக்தி, மனோகர், வினோத்குமார், தேவனாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.