/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ--சேவை மையம் திறப்பு
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ--சேவை மையம் திறப்பு
ADDED : டிச 24, 2024 07:51 AM

நெய்வேலி; நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், ரூ. 21 லட்சம் செலவில் புதிய இ--சேவை மையம் திறக்கப்பட்டது.
புதிய இ-சேவை மையத்தை திறந்து வைத்து சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில், இ-சேவை மயைத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணபிக்கவும் முடியும்.
நெய்வேலி தொகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று சிரமப்படுவதை தடுக்கும் நோக்கில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் மூலம் மக்கள் இணையம் வழியாக அனைத்து அரசு நலன்களையும் பெற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், பி.டி.ஓ., வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ்குமார், அவைத் தலைவர்கள் வீர ராமச்சந்திரன், நன்மாற பாண்டியன், சிவந்தான் செட்டி, பொருளாளர் ஆனந்த ஜோதி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், ஆடலரசன், துணை செயலாளர்கள் செல்வகுமார், ஏழுமலை, இந்திரா நகர் அவைத் தலைவர் கணேசன் பங்கேற்றனர்.