/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்வி ஊக்கத் தொகை; பிராமணர் சங்கம் வழங்கல்
/
கல்வி ஊக்கத் தொகை; பிராமணர் சங்கம் வழங்கல்
ADDED : ஆக 18, 2025 11:56 PM

சிதம்பரம்; சிதம்பரத்தில் பிராமணர் சங்கம் சார்பில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
சங்க தலைவர் ராகவன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். உப தலைவர் சாமிநாதன் வரவேற்றார். நிர்வாகிகள் கணேசன் சங்கரமூர்த்தி, கிருஷ்ணசாமி தீட்சிதர், ராமச்சந்திரன், ஆசிரியர் அருணாச்சலம், நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விக்னேஷ், ஹரி ஹரன், சத்தியபிரனேஷ், ஸ்ரீ ஹரிகரன், மாணவிகள் அபிராமி, பிரித்தியக்ஷா, மகாலட்சுமி, ஸ்ரீவிதா ஆகியோருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

