UPDATED : ஆக 22, 2026 04:11 PM
ADDED : ஆக 22, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கத்தில் இறந்தவரின் உடல் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த மாலதி,77 உடல்நலக் குறைவால் இறந்தார். டாக்டர் சந்திரசேகர் ஆலோசனைபடி மாலதியின் கணவர் அருணகிரிநாதன், மகன் குமாரவேல், மகள் மட்டுவார்குழலி ஆகியோர் மாலதியின் உடல் மற்றும் கண்களை தானமாக வழங்க முன்வந்தனர்.
நெல்லிக்குப்பம் அரிமா சங்க உதவியுடன் இறந்த மாலதியின் கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தானமாக பெற்றனர்.
தொடர்ந்து மாலதியின் உடல், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்புக்காகவும், உடற்கூறு ஆராயச்சிக்காகவும் தானமாக வழங்கப்பட்டது. டாக்டர் சந்திரசேகர், அரிமா சங்க தலைவர் ஜெயச்சந்திரன், விஜயகுமார், ரமேஷ்பாபு உடனிருந்தனர்.
