ADDED : மார் 14, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பெரம்பலுார் மாவட்டம், அகரம் சீகூர் தங்கராசு, 72; என்பவர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில், வசிஷ்டபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
