ADDED : மே 03, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: அடையாளம் தெரியாத முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் ரயிலடி பாதை அருகே உள்ள புதரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் துாக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்த சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
