ADDED : ஜன 13, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
வடலுார்: வயிற்று வலியால் எலிபேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
வடலுார், கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 67; வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த, 8ம் தேதி அன்று வயிற்று வலியால் மனமுடைந்த முதியவர் சந்திரசேகரன் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த சந்திரசேகரன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
