UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 04:07 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: உடல்நிலை பாதித்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அடுத்த கலர்குப்பத்தை சேர்ந்தவர் நாராயணன், 65; கடந்த 8 ஆண்டுகளாக உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
மகன் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உறவினர்கள் அவரை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர், அன்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
