/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மது என விஷம் சாப்பிட்ட முதியவர் சாவு
/
மது என விஷம் சாப்பிட்ட முதியவர் சாவு
ADDED : டிச 14, 2024 05:54 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மது என நினைத்து பூச்சி மருத்து குடித்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,60. இவருக்கு மதுபழக்கம் உள்ளது. இவரது வீட்டில் நிலத்திற்கு அடிக்கும் பூச்சிகொல்லி மருந்துக்கு பக்கத்தில் மதுபான பாட்டிலை வைத்திருந்தார்.
நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மதுபானம் என நினைத்து பக்கத்தில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

