/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு
/
போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு
ADDED : நவ 13, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் அர்ஜூணன், 70. விவசாயி.
இவர் நேற்று காலை 10:00 மணியளவில், வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை மது போதையில் சாப்பிட்டுள்ளார்.
மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.