ADDED : ஜன 14, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கடலுார்: மொபட்டில் வந்த முதியவர் சாலை பள்ளத்தில் விழுந்து இறந்தார். கடலுார், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,60; இவர், சொந்த வேலையாக சோரியாங்குப்பம் சென்று விட்டு வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குமாரபேட்டை அருட்பெருஞ்ஜோதி நகர் அருகில் வந்த போது, சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
