/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., கூட்டத்தில் முதியவர் சாவு
/
அ.தி.மு.க., கூட்டத்தில் முதியவர் சாவு
ADDED : ஜன 22, 2025 09:09 AM
அரியாங்குப்பம், : புதுச்சேரி அ.தி.மு.க., மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், அரியாங்குப்பம் தொகுதி, ஆர்.கே.நகர், தந்தை பெரியார் சிலை அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு மேடையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டம் நடந்த பகுதியில் தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. நலத்திட்ட உதவிகளை வாங்க மக்கள் முண்டியடித்து சென்றனர். இந்நிலையில், வீராம்பட்டினத்தை சேர்ந்த அய்யனாரப்பன், 65, என்பவர், மேடைக்கு சென்றார். அப்போது, அவர் மேடை அருகே மூச்சு திணறி மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.