ADDED : செப் 11, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
வேப்பூர், செப். 12-
தீயில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூரைச் சேர்ந்தவர் சின்னசாமி, 70; விவசாயி. இவர், நேற்று பகல் 3:00 மணியளவில் தனது வயலில் இருந்த காய்ந்த முட்புதர்களை தீ வைத்து எரித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்து கருகி இறந்தார்.
தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் பிரேதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
