ADDED : மே 02, 2025 05:12 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே சிலீப்பர் கட்டையில் முதியவர் இறந்து கிடந்தது குறித்து இருப்பு பாதை போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே, மாரி ஓடை ரயில் பாலத்தில் உள்ள சிலீப்பர் கட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசா ரணை மேற்கொண்டனர்.
அதில், திட்டக்குடி அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 52; என்பது தெரிந்தது. தனது குடும்பத்தினருடன் விருத்தாசலம், ராமச்சந்திரன் பேட்டையில், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அதிக குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 29ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது, குடித்து விட்டு, சிலீப்பர் கட்டையில் படுத்திருந்தவர் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.