ADDED : ஏப் 09, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: நடந்து சென்ற முதியவர் வலிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமு, 59; கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வலிப்பு இருந்தது. கடந்த மாதம், 16ம் தேதி சொந்த வேலை காரணமாக பெ.பொன்னேரி நடந்து சென்றபோது, மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
