ADDED : மார் 28, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சாலையை கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த புடையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் நல்ல தம்பி, 71; இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சோழத்தரத்தில் டீ குடிக்க, வி.கே.டி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி சென்றதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல தம்பியின் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
