நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : மூதாட்டியின் கண்கள் மற்றும் உடல் தானமாக பெறப்பட்டது.
புதுச்சேரி அடுத்த காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் மூதாட்டி பட்டு; 82; நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள், இறந்த மூதாட்டியின் குடும்பத்தினரிடம் பேசி, உடல் மற்றும் கண்களை தானமாக பெற்றனர்.
அதனை தொடர்ந்து கண்கள் புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கும், உடல் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.