ADDED : மார் 14, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி 'தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி, ரகுபதி, டி.எஸ்.பி., (பயிற்சி) சரவ ணகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர்கள் சாந்தினி, பிரசன்னா உட்பட பலர் பங்கேற்றனர்.
