ADDED : மார் 28, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் இன்று நடக்கிறது.
விருத்தாசலம், காங்கிரஸ் மாளிகை மைதானத்தில், இன்று மாலை 5:30 மணியளவில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடக்கிறது.
இது சம்மந்தமாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி நுழைவுவாயில் உள்ளிட்ட பொது இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் கோலம், ஓவியம், பேச்சு, பாட்டு, கவிதை போட்டிகள் நடக்கிறது.
இதில், வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். முதல்முறை ஓட்டளிக்கும் வாக்காளர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
