/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்
/
கடலுாரில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மே 04, 2025 04:06 AM

கடலுார் : கடலுார் சிப்காட்டில் தொழிலாளர் தினத்தையொட்டி தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பின், அவர் பேசுகையில் ' 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொழில்துறை பகுதிகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய எந்த ஒரு குடிமகனும் தேர்தலின் போது ஓட்டளிக்க முழு உரிமை உடையவர்கள் ஆவார். மேலும் தொழிலாளர்கள் குடும்பத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒட்டளிப்பதை தொழிலாளர்கள் கடமையாக கருத வேண்டும்' என்றார். ஆர்.டி.ஓ., அபிநயா, சிப்காட் திட்ட அலுவலர் காந்திமதி, டி.எஸ்.பி., ரூபன்ராஜ், தேர்தல் தாசில்தார் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.